About Us
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டத்தைச் சேர்ந்த ஆட்டுவம்பட்டி மலை கிராமத்தில் முதன் முதலாக பெண்களுக்காக நிறுவப்பட்டதுதான் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கொடைக்கானல். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், குளுமையான தட்பவெப்பத்துடன் அமைந்துள்ளது கொடைக்கானல் நகரம். பொதுவாக இந்த மேற்குத்தொடர்ச்சி மலைக்கூட்டங்களை பழனிமலைகள் என்று அழைப்பார்கள். இயற்கை எழில்கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால், தமிழ்மொழியில் “காடுகளின் கொடை” என்றும், “மலைகளின் இளவரசி” என்றும் கொடைக்கானல் நகரத்தை அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். இத்தகைய சிறப்புடன் திகழும் கொடைக்கானல் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா முன்னிலையில் அரசு ஆணை எண் 15 ன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களால் 1984 ஆம் ஆண்டு அன்னை தெரசா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தால் 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு “அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, கொடைக்கானல்” என்று அழைக்கப்பட்டு பெண்கள் கல்லூரியாக செயல்பட்டு வந்தது. பல்கலைக்கழக மானிய குழுவின் நிலை எண் 12b மற்றும் 2f படி, இப்பல்கலைக் கழக கல்லூரி அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கான முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாணவிகளுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தி இயங்கி வருகிறது.
2018-2019 கல்வியாண்டில், அரசு ஆணை எண் 36, உயர்கல்வித்துறை (ஜி1), நாள் 28-02-2019 ன்படி, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியாக இயங்கிவந்த நம் கல்லூரி, அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கொடைக்கானல் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இக்கல்லூரியில் பயிலும் இப்பகுதியைச் சேர்ந்த முதல் தலைமுறை இளங்கலை மாணவிகள் தங்களது முதுகலை படிப்பினை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
The Tamil Nadu Government’s first-ever Women’s College is situated at Attuvampatti, Kodaikanal, a quiet hill station tucked away in the Palani hills of South India. Kodaikanal is a town belonging to the taluk division of Dindigul district in the state of Tamil Nadu, India. Its name in the Tamil language means “The Gift of the Forest“. Kodaikanal is fondly remembered as the “Princess of Hills” as it is a popular tourist destination.
The College made its humble genesis in 1995. It was earlier commissioned to function as a Constituent College of Mother Teresa Women’s University and functioned as Mother Teresa Women’s University College, Kodaikanal. It was established in the year 1984 by the enactment of Tamilnadu Act 15. HonourableThiru. MG. Ramachandran, the then chief minister of Tamil Nadu, in the presence of Nobel Laureate Mother Teresa. Having the status of 12b, 2f from UGC, this University College extended its services to women students of all communities. Its prime focus being empowerment through education, it strived for academic excellence and upliftment of women in their respective fields.
In the academic year 2018-2019, as per G.O.No.36, Higher Education (G1) Department, Dated: 28-02-2019, the college is formally known as Mother Teresa Women’s University Constituent Arts and Science College, Kodaikanal, Dindigul District, is changed in the name of Government Arts and Science College for Women, Kodaikanal, Dindigul District. The undergraduate courses provided by the college acts as feeder courses that aid many first-generation learners to pursue their PG courses provided by the Mother Teresa Women’s University, Kodaikanal.
WELCOME TO GASCW, KODAIKANAL.
At present, the following courses have been offered:
வ.எண் | பாடப்பிரிவுகள் | துவக்கப்பட்ட ஆண்டு |
---|---|---|
#1 | B.C.A. கணினி பயன்பாடு | 1995-1996 |
#2 | B.B.A. வணிக நிர்வாகம் | 1995-1996 |
#3 | B.Com. வணிகவியல் | 1999-2000 |
#4 | B.Sc. கணிதம் | 1999-2000 |
#5 | B.Sc. இயற்பியல் | 2002-2003 |
#6 | B.A தமிழ் | 2009-2010 |
#7 | B.A ஆங்கிலம் | 2009-2010 |
#8 | B.A பொது பணியியல் | 2009-2010 |
#9 | B.Sc. தாவரவியல் | 2013-2014 |
#10 | B.Sc. வேதியியல் | 2013-2014 |
Sl.No. | Name of the Course | Year of Approval |
---|---|---|
#1 | B.C.A. | 1995-1996 |
#2 | B.B.A. | 1995-1996 |
#3 | B.Com. | 1999-2000 |
#4 | B.Sc. Mathematics | 1999-2000 |
#5 | B.Sc. Physics | 2002-2003 |
#6 | B.A Tamil | 2009-2010 |
#7 | B.A English | 2009-2010 |
#8 | B.A Public Service | 2009-2010 |
#9 | B.Sc. Botany | 2013-2014 |
#10 | B.Sc. Chemistry | 2013-2014 |
Vision
- Liberation and Upliftment of Women, with special reference to the poor, marginalized and destitute, from all forms of shackles of life through Quality and Value based Higher Education.
Mission
- To Promote Quality Education to Women in all sectors
- To identify and address the emerging needs
- To contribute to an integrated and coordinated development of women
- To innovate and develop in the multifaceted areas of teaching and research.
- To enhance and sustain core competency skills and to develop entrepreneurial and leadership qualities in students.
வ.எண் | பாடப்பிரிவுகள் | அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை |
---|---|---|
#1 | B.C.A. கணினி பயன்பாடு | 60 |
#2 | B.B.A. வணிக நிர்வாகம் | 60 |
#3 | B.Com. வணிகவியல் | 60 |
#4 | B.Sc. கணிதம் | 60 |
#5 | B.Sc. இயற்பியல் | 60 |
#6 | B.A தமிழ் | 60 |
#7 | B.A ஆங்கிலம் | 120 |
#8 | B.A பொது பணியியல் | 60 |
#9 | B.Sc. தாவரவியல் | 60 |
#10 | B.Sc. வேதியியல் | 60 |
மொத்தம் | 660 |
Sl.No. | Subject | No. of seats sanctioned for Admission |
---|---|---|
#1 | B.C.A. | 60 |
#2 | B.B.A. | 60 |
#3 | B.Com. | 60 |
#4 | B.Sc. Mathematics | 60 |
#5 | B.Sc. Physics | 60 |
#6 | B.A Tamil | 60 |
#7 | B.A English | 120 |
#8 | B.A Public Service | 60 |
#9 | B.Sc. Botany | 60 |
#10 | B.Sc. Chemistry | 60 |
Total | 660 |